திமுக வேட்பாளர் அறிவிப்பு! ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்!!
Jan 11, 2025, 09:16 IST
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார் என்று திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
காங்கிராஸ் கட்சியுடன் கலந்து பேசியதில் திமுக இந்த தொகுதியில் போட்டியிடுவதாக முடிவு எடுக்கப்பட்டது. திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளார் வி.சி.சந்திரகுமார் போட்டிய்டுவார் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.