வரும் 14-ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 
Kanniyakumari

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி இந்தக் கோவிலுக்கு வருவதால், பெண்களின் சபரிமலை என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது. 

leave

இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் மாசி கொடை விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா வரும் 14-ம் தேதி நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம்.

இந்த திருவிழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மட்டும் ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

Local-holiday

14.03.2023 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2023 மே மாதம் இரண்டாவது சனிக்கிழமை (13.05.2023) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்படி உள்ளூர் விடுமுறை அளிக்கும் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web