அருவருக்கத்தக்க ஆபாச வீடியோக்கள்.. பிரபல யூடியூபர் இரவோடு இரவாக கைது!

 
Inba Inba

சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக வீடியோ வெளியிட்டு வந்த அறந்தாங்கியை சேர்ந்த இன்பா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் இன்பா (எ) இன்பநிதி (24). இவர், இன்பா டிராக் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாகவே இவரின் சேனல் டிரெண்டிங் உள்ளது. அதற்கு காரணம் இவர் போடும் ப்ரீயட்ஸ் வீடியோக்கள். இவர் வெளியிடும் வீடியோக்களில் ஆபாசம் கொட்டி கிடக்கும். பெண்களின் ப்ரீயட்ஸ் போது, தான் எப்படி அவர்களை நடத்துவேன், எப்படி அவர்களை தங்கு தாங்குவேன் என்று வீடியோ போடுவதே வழக்கம்.

இவர் பொதுவாக இன்ஸ்டாகிராமில், பேஸ்புக்கில் போஸ்ட் போடுவது வழக்கம். ஆனால் சமீபத்தில் ட்விட்டருக்கும் வந்தவர் அங்கும் போஸ்டுகளை போட தொடங்கினார். அதில் அவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில்தான் சர்ச்சை ஏற்பட்டது. அதில் அதிகமான ஆபாச வசனங்கள் இருந்தது. அதை தாண்டி குழந்தைகளை பாலியல் தேவைக்கு பயன்படுத்துவது பற்றியும் இருந்தது.


அதில் டீச்சர் ஒருவருக்கும் மாணவி ஒருவருக்கும் இடையில் உள்ள காதல் பற்றி போஸ்ட் செய்து இருந்தார். மோனோ ஆக்டிங் முறையில் ஆடியோ எதுவும் இல்லாமல் சப் டைட்டில் மட்டும் வைத்து முகத்தில் ரியாக்சன் மட்டும் கொடுத்து வீடியோ வெளியிடுவதே இவரின் ஸ்டைல். அதிகமான ஆபாச வசனங்கள் கொண்ட சப் டைட்டில் வைத்து ஆபாசத்தின் உச்சமாக இவர் வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ தொடர்பாக சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் புகார் கொடுத்தார். அதேபோல் நெட்டிசன்கள் பலரும் இவருக்கு எதிராக புகார் வைத்தனர்.

சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் இருந்த ஆபாச வசனங்கள், காட்சிகளை பார்த்து நெட்டிசன்கள் கடுப்பில் உச்சிக்கே போனார்கள். இது சோசியல் மீடியாவில் கோபமாக பகிர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர். ஆனால் இன்பாவோ வீடியோவை டெலிட் செய்தார். அதோடு நிற்காமல் திமிராக ட்விட்டர் என்றால் பெரிய இதுவா, என்னை எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது. என் கேரக்டர் உங்களுக்கு தெரியாது. இனி தெரியும் என்று கூறியிருந்தார்.

Complaint

அவரின் அந்த பேச்சு கடும் சர்ச்சையானது. இதையடுத்து சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் புகார் கொடுத்தார். இந்த புகார் அடிப்படையில் போலீசார் இன்பாவை நேற்று இரவு கைது செய்தனர்.

From around the web