உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவு நிறுத்தம்.. அண்ணா பல்கலைக்கழக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

 
Anna University

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம், 13 உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் உட்பட 523 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவை அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று இயங்கி வருகின்றன.

College Students

இந்த நிலையில், பொறியியல் படிப்புகளைத் தமிழ் வழியிலும் மாணவர்கள் படிப்பதற்கு முந்தைய திமுக ஆட்சியில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதலில் அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் சிவில், மெக்கானிக்கல் உள்ளிட்ட சில பாடப்பிரிவுகள் தமிழ் வழியில் வழங்கப்பட்டன. அதன்பிறகு பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளிலும் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.

இந்த நிலையில் வரும் கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆரணி, திண்டிவனம், விழுப்புரம், திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலூர், பண்ருட்டி உள்ளிட்ட 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் மொழியில் செயல்பட்டு வரும் மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப் பிரிவுகள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளன.

Anna-University

மாணவர் சேர்க்கை இல்லாததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 உறுப்பு கல்லூரிகளில் ஆங்கில வழி சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகள் நீக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web