ஆட்சியைப் பிடிக்கத்தான் கட்சி ஆரம்பித்தாரா விஜய்? அல்லது...

 
Vijay

விஜய் ஆட்சியை பிடித்து முதலமைச்சர் ஆக வேண்டும் என கட்சி ஆரம்பித்திருந்தால், கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவதிலும், தனக்கு அடுத்த நிலையில் கட்சியின் அமைப்புகளில் அரசியல் அனுபவம் வாய்ந்த திறமையான நபர்களை அமர்த்துவதிலும், சம்பிரதாயத்துக்காக வரமாட்டேன் என்று பஞ்ச் டயலாக் பேசாமல், இந்நேரம் களத்துக்கு வந்து மக்களை சந்தித்து அவர்களுக்காக போராட்டம் நடத்துவதிலும் கவனம் செலுத்தி இருப்பார்.

முதல் தேர்தலில் முதலமைச்சர் என்பது சினிமா கற்பனைக்கு வேண்டுமானால் கதையாகலாம் களத்தில் நிஜமாகாது என்பது விஜய்க்கு தெரிந்தே இருக்கும். அப்படி இருக்கும் போது, முதல் தேர்தலில் தன் பலத்தை நிரூபிப்பதற்கு தான் முன்னுரிமை கொடுத்து அரசியல் பணியை துவங்கி இருப்பார்.

ஆனால், முதல் மேடையிலேயே ஆட்சியில் பங்கு... இரண்டாவது மேடையில், தெளிவாக திருமா அறிவித்த பிறகும் விசிக கூட்டணிக்கு வராத விரக்தி பேச்சு...

இந்த இரண்டு செய்திகளும் சொல்வது, திமுக கூட்டணியை எப்படியாவது உடைக்க வேண்டும் என்பது தான்.

முதலமைச்சராக வேண்டும் என்று நினைத்தால், தமிழ்நாட்டில் ஆண்ட, ஆளும் அதிமுக, திமுக ஆட்சிகள் சரியில்லை. இவர்களுக்கு நான் தான் சரியான மாற்று அரசியல் சக்தி என்று பேசி இருப்பார்.

இவர் திமுகவை குறி வைத்து அதிமுகவை ஆப்ஷனில் வைத்து அரசியல் செய்வதை பார்க்கும் போது இது ஏதோ தேர்தலுக்கான பேக்கேஜ் அரசியல் போல தெரிகிறது.

தேர்தலுக்கு முன்பு களத்துக்கு வந்து நேரடியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு ஓட்டு பிரிக்கும் டெல்லி பார்முலா அரசியல் போலிருக்கு.எது எப்படியோ ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது, விஜய் இப்போதே எக்ஸ்போஸ் ஆகிவிட்டார். அரசியலில் எக்ஸ்ட்ரீம் தொட சாத்தியம் இல்லை..

- வி.எம்.கே.பாபு

From around the web