திமுக அரசு தான் கோசாலைகளை உருவாக்கியதா? இயக்குனர் பா.ரஞ்சித் சொல்வது என்ன? 

 
P Ranjith

இயக்குநர் பா.ரஞ்சித் திமுக அரசுதான் ‘கோசாலைகளை’ உருவாக்கி பராமரிப்பது போல ஒரு பொய்யை மிகவும் கான்ஃபிடண்ட்டாக ஒரு மேடையில் உதிர்த்திருக்கிறார். அதற்கெனவே ஒரு துறையை உருவாக்கியதைப் போல் எல்லாம் ஆவேசப்படுகிறார். இந்த ஆட்சியில் மதம் மிக அதிக அளவில் பரப்பப்படுகிறதாம். எப்படி? சங்கிகள் கேட்டால் சந்தோசப்படுவார்கள்.

இந்தப் பேச்சைப் பகிர்ந்து நீலச் சங்கிகள் திருமாவையும் திமுகவையும் இழுத்துவைத்து திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  கோசாலை, அதாவது கோவில்களுக்குத் தானமாகக் கொடுக்கப்படும் மாடுகளைப் பராமரிக்கும் இடங்கள் அந்தந்த கோவில்களால் (இந்து அறநிலையத்துறையால்) காலம் காலமாக நடத்தப்படுகிறது. ஏழைப் பெண்களுக்கும், பெண் சுய உதவிக்குழுக்களுக்கும், பூசாரிகளுக்கும் அந்த மாடுகளைத் தானமாகக் கொடுப்பது வழக்கம்.  ஆனால் மாடுகள் கறிக்கடைக்கு அனுப்பப்படுவதாக சங்கிகள் 2022ல் தொடுத்த பொய் வழக்கில் நீதிமன்றம் மாடுகளை தானம் கொடுப்பதற்குத் தடை விதித்தது. 

இதன் பின்னர், கோசாலைகள் சரியாகப் பராமரிக்கப்படாததால் ரோட்டில் திரியும் மாடுகளால் ஏற்படும் விபத்துகளைக் கட்டுப்படுத்த கோசாலைகளை மேம்படுத்துவதற்காக இந்து அறநிலையத்துறை நிதி ஒதுக்கியது. கோசாலைகளே இல்லாத கோவில்களின் மாடுகள் முழுக்க முழுக்க தெருவில் திரிந்துகொண்டிருப்பதைத் தடுக்க அங்கு கோசாலைகள் அமைக்கவும் நிதி ஒதுக்கியது. இதெல்லாம் இந்து அறநிலையத்துறையின் பணிகள், கடமைகள். 

கோவில்களுக்கு மாடு அல்ல, ஆடு தானமாகக் கொடுத்தாலும் அதைக் கறிக்கடைக்கு அனுப்ப முடியாது. எனக்கும் கூட வருத்தம்தான். ‘உணவு’ பற்றாக்குறை இருக்கும் நாட்டில் இவ்வளவு ‘ப்ரோட்டீனை’ கோவிலுக்கு தானம் கொடுக்கிறேன், பராமரிக்கிறேன் என வீணாக்குகிறார்களே என்று. ஆனால் அது மதம் சார்ந்த உரிமை.  "மாடு என்பது சாமி இல்லடா, மாடு என்பது கோழி போல ஆடு போல  உணவு," என்பதை பரப்புரையினால்தான் சாதிக்க முடியும்.

ஆனால், அனைத்து மக்களுக்கான ஒரு சமூகநீதி ஆட்சியின் மீது, சங்கிகள் அடிவயிற்றில் இருந்து வெறுக்கும் ஒரு மதச்சார்பற்ற அரசின்மீது பொய்களைப் பரப்புவதன் மூலம் ரஞ்சித் சாதிக்க நினைப்பது என்ன?  பா.ரஞ்சித் அவர் மீதான நியாயமான விமர்சனங்கள், சந்தேகங்களினால் பதட்டமடைகிறார். அந்தப் பதட்டத்தினால் மேலும் மேலும் பொய்களைச் சொல்லி மேலும் மேலும் அம்பலப்படுகிறார்.

காவி சங்கிகள் ஒரு பக்கம் இந்த ஆட்சியை இந்துமதவிரோதி என பரப்புவதும், நீல சங்கிகள் ஒரு பக்கம் இந்த ஆட்சியை மதவாத அரசு என பரப்புவதும் திட்டமிட்டே நடக்கிறது. உண்மையில் இந்த அரசு ‘அனைவருக்குமான’ அரசு என்பது ஃபீப் சாப்பிடுகிறவர்களுக்கும் தெரியும், மாட்டைக் கும்பிடுகிறவர்களுக்கும் தெரியும். நீலசங்கிகளும், காவிச்சங்கிகளும் என்னதான் கூட்டணி போட்டு 'மங்காத்தா' விளையாடினாலும் இம்மண்ணில் அது பலிக்காது. 

-டான் அசோக்
ஏப்ரல் 14,2025

From around the web