நோட்டாவிடம் தோற்றாரா சீமான்? ஈரோடு இடைத்தேர்தல் அதிசயங்கள்!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் மிகப்பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது ஆளும் திமுக கட்சி. திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 75 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளார். எதிர்த்துப் போட்டியிட்ட ஒரே ஒரு கட்சியாகக் கருதப்படும் நாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தலிலிம் வேட்புமனு கட்டுத்தொகையை இழந்து தோற்றுள்ளது.
அதிமுக வாக்குகள் ஒன்று கூட நாம் தமிழர் கட்சிக்குச் செல்லவில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. அதே வேளையில் பாஜகவின் வாக்குக்களும் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்துள்ளதையும் தெரிந்து கொள்ள முடிகிறது.
அதே வேளையில் நோட்டா மூன்றாவது இடத்தைப் பெற்று கடும் போட்டியைக் கொடுத்துள்ளது. வாக்குச்சாவடி எண் 72 மற்றும் 78 ல் நாம் தமிழர் கட்சியை விட நோட்டாவுக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்துள்ளது. அதிமுக விசுவாசிகள் திமுகவுக்கு அல்லது நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். இன்னும் பலர் வாக்கு செலுத்துவதையே புறக்கணித்துள்ளனர் என்றே தெரிகிறது.
தேர்தல் அறிவித்த நாள் தொடங்கி, பரப்புரை முடியும் நேரம் வரை சீமான் ஈரோட்டில் முகாமிட்டு பரப்புரை செய்தும் கட்டுத் தொகை கிடைக்கவில்லையே என்று அக்கட்சியினர் வருத்தப்படுவதையும் தெரிந்து கொள்ள முடிகிறது.