டீ குடிக்கப் போனதால் பிழைத்தாரா? சென்னையில் திடீரென்று எரிந்த கார்!!

 
Car Fire

சென்னை அம்பத்தூரில் நின்று கொண்டிருந்த கார் திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் பரப்பரப்பு ஏற்பட்டது. கோயம்பேட்டிலிருந்து முகப்பேருக்கு சொகுசுக் காரில் சென்று கொண்டிருந்தார் காரின் உரிமையாளர். வழியில் அம்பத்தூர் தொழிற்பேட்டை வாவின் சிக்னல் அருகே காரை நிறுத்தி விட்டு டீ குடிக்கச் சென்றுள்ளார்.

டீ குடித்துக் கொண்டிருந்தவர் திரும்பிப் பார்த்தால், காரில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்திருக்கிறது. உடனடியாக அங்கிருந்தவர்கள் தீயணைப்புப் படைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து காரில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். நல்லவேளையாக தீ வேறு எங்கும் பரவவில்லை. யாருக்கும் தீக்காயம் ஏற்படவும் இல்லை.

டீ குடிக்க நிறுத்தாமல் காரில் சென்று கொண்டிருந்த போதே தீப்பிடித்து எரிந்திருந்தால், கார் உரிமையாளருக்கு என்ன ஆயிருக்கும் என்று மக்கள் பேசிக்கொண்டனர். அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள்.

From around the web