துணை முதலமைச்சரின் விளம்பரமற்ற உதவி! நெகிழ்ச்சியடைந்த கராத்தே வீரர் ஹுசைனி!!

 
hussaini hussaini

பிரபல கராத்தே வீரரும் திரைப்பட நடிகருமான ஹுசைனி புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் அதிமுக கட்சியைச் சேர்ந்தவர். இவருக்கு மருத்துவ உதவிக்காக 5 லட்சம் ரூபாயை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத் துறை மூலம் வழங்கியுள்ளார். ஆனால் இது குறித்த எந்த செய்தியும் துணை முதலமைச்சர் தரப்பிலிருந்து வெளியாக வில்லை. இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை ஹுசைனியிடன் வீடியோ காலில் பேசிய காணொலி பரவி உள்ளது. தன்னைச் சுற்றி குழப்பமான தகவல்கள் பரவுவதை உணர்ந்த ஹுசைனி உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

5 நாட்களுக்கு முன்னதாகவே துணை முதலமைச்சர் நிதியுதவி செய்ததாகவும் இது குறித்து எந்த விளம்பரமும் அவர் செய்து கொள்ளவில்லை. அதிமுக காரனான எனக்கு கட்சி பாகுபாடின்றி அவர் உதவி செய்துள்ளார். அவருடைய பெருந்தன்மைக்கு சல்யூட் செய்கிறேன் என்று ஆங்கிலத்தில் கூறியுள்ளார். ஹுசைனியின் இந்த வீடியோவை திமுகவினர் சமூகத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.