351 பிரிவை நீக்குங்கள்! வலுக்கும் கோரிக்கை!!

ஒன்றிய கல்வி அமைச்சர் தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் நிதி வழங்க சட்டத்தில் இடம் இருக்கிறது என்று கூறியுள்ளதை அடுத்து தமிழ்நாட்டில் மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்குமோ என்ற சூழல் எழுந்துள்ளது. மொழிப்போரை தூண்ட வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் காட்டமாகத் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளதை அடுத்து, சமூகத்தளங்களில் இந்தி எதிர்ப்பு மீண்டும் பேசு பொருளாகி உள்ளது #StopHindiImposition ஹேஷ்டேக் மீண்டும் வெளிவரத் தொடங்கியுள்ளது.
மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்புப் போராட்டம் வந்தால்,கேரளா, கர்நாடாகா மாநில மக்களும் இணைந்து போராடும் சூழலும் உள்ளது. இந்நிலையில் அரசியலமைப்புச் சட்டத்தின் 351 வது பிரிவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைக்கிறார்கள். 351வது பிரிவு, இந்தியை பரப்புவது ஒன்றிய அரசின் கடமையாகும் என்று கூறியுள்ளது.
” Article 351: It shall be the duty of the Union to promote the spread of the Hindi language. அதாவது இந்தி மொழியைப் பரப்புவது ஒன்றிய அரசின் கடமையாகும் என்கிறது இப்பிரிவு. இந்த ஒரு உறுப்பைக் காரணமாக வைத்துக் கொண்டே இந்தியானது பல்வேறு இடங்களிலும், பல்வேறு தளங்களிலும் நம் மீது திணிக்கப்படுகிறது. இப்பிரிவு இருக்கும் வரை இந்தித் திணிப்பு இருக்கும். இந்திய மொழிகளில் ஒன்றான இந்திக்கு, வேறு எந்த இந்திய மொழிக்கும் தரப்படாத முக்கியத்துவம் ஏன் தரப்பட்டுள்ளது ? இது இந்திக்கு மட்டும் ஒரு சிறப்பான இடத்தையும் மற்ற இந்திய மொழிகளை இரண்டாம் தரமாகக் கருதப்படுவதற்கும் முக்கிய காரணமாக அமைகிறது இல்லையா? எனவே இப்பிரிவு இந்தி ஆதிக்கத்தை நம் மீது திணிப்பதாலும், மொழிச் சமத்துவத்திற்கு எதிரானது என்பதாலும் மாநில சுயாட்சிக்கான நமது முழக்கங்களில் முக்கியமான ஒரு முழக்கமாக "பிரிவு 351 நீக்கப்பட வேண்டும்" என்பதும் இருக்க வேண்டும் என்பதை இந்த நேரத்தில் வலியுறுத்தக் கடமைப்பட்டுள்ளோம்” என்று சமூகத் தளத்தில் சண்முகம் சின்னராஜ் என்ற திமுக தொண்டர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
351வது பிரிவை நீக்குவதே நிரந்தரத் தீர்வு!
— shanmugamchinnaraj (@shanmugamchin10) February 16, 2025
Article 351: It shall be the duty of the Union to promote the spread of the Hindi language.
அதாவது இந்தி மொழியைப் பரப்புவது ஒன்றிய அரசின் கடமையாகும் என்கிறது இப்பிரிவு.
இந்த ஒரு உறுப்பைக் காரணமாக வைத்துக் கொண்டே இந்தியானது பல்வேறு… pic.twitter.com/e7N9QpsHyR