திருபுவனம் லாக்கப் மரணம்.. பரப்பப்பட்ட வதந்திகள் என்ன?

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் காவல் நிலையத்தில் போலீஸ் விசாரணையில் அஜித்குமார் என்ற இளைஞர் போலீசார் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அனைத்துக் கட்சியினரும் இடதுசாரி செயற்பாட்டாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தொடர்புடைய காவல் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து சட்டப்படி தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கைகள் அனைத்து தரப்பிலிருந்தும் எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பல்வேறு பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டுள்ள விவகாரம் வெளி வந்துள்ளது.
அஜித்குமார் மாரடைப்பால்தான் இறந்துபோனார் என்று முதல்வர் கூறியதாக நியூஸ்7 செய்தி வெளியிட்டது போல் நியூஸ் கார்டு போன்று வதந்தி பரவியது. இதை நியூஸ்7 தொலைக்காட்சியே மறுத்துள்ளது.
இறந்துபோன அஜித்குமார் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர் என்று ஒரு வதந்தி பரவியது. உண்மையில் அவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் முக்குலத்தோர் என்று மற்றொரு வதந்தி பரப்பப்பட்டுள்ளது. அவர்களில் 4 பேர் மட்டுமே முக்குலத்தோரை சேர்ந்தவர்கள் மீதி இரண்டுபேர் 2 பேர் பட்டியல் சமூகம் என்றும் விவரம் வெளியாகியுள்ளது.
எதற்காக, யாரால் இந்த வதந்திகள் பரப்பப்பட்டது என்பதையும் சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்துள்ளது.