கணவர் மரணம்.. வாட்டிய தனிமை.. 3 வயது மகளைக் கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை.!!

 
Bhavani

பவானியில் தனியார் தங்கும் விடுதியி்ல் தனது 3 வயது மகளைக் கொலை செய்துவிட்டு, இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சசிதரன். இவரது மனைவி கோகிலவாணி (25). இந்த தம்பதிக்கு இதழிகா (3) என்ற மகள் இருந்தார். சசிதரன் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு உயிரிழந்த நிலையில், பட்டதாரியான கோகிலவாணி திருச்செங்கோடு தனியார் எண்ணை மில்லில் கம்யூட்டர் ஆப்ரேட்டராக வேலை செய்து வந்தார்.

suicide

கணவர் இறந்த நிலையில், கோகிலவாணி தனது மகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தபோது, வேலை செய்யவில்லை என தாய் கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த கோகிலவாணி, மகள் இதழிகாவுடன் வீட்டை விட்டு வெளியேறி, கடந்த 13-ம் தேதி பவானி கூடுதுறை அருகில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கி உள்ளார்.

இரண்டு நாட்களாகியும் அறையிலிருந்து யாரும் வெளியே வராதததால், பவானி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததால் பவானி கிராம நிர்வாக அலுவலர் குமார் முன்னிலையில் கதவை உடைத்துப் பார்த்தனர்.

Bhavani

அப்போது, கோகிலவாணி பேனில் துப்பட்டாவால் தூக்கிட்டு தொங்கியபடி இருந்ததும், 3 வயது குழந்தை இதழிகா படுக்கையில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவர்களின் உடமைகளை சோதனை செய்தபோது அடையாளம் காணப்பட்டு, பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீசார் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, பவானி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

From around the web