ரயிலின் படிக்கட்டில் தொங்கியபடி நடனம்.. மின் கம்பத்தில் அடித்து தூக்கி வீசப்பட்ட மாணவன்.. மருத்துவமனையில் அனுமதி!

 
Chennai

சென்னை மின்சார ரயிலில் கல்லூரி மாணவன் தொங்கியபடி சாகசம் செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ் (16). இவர் பாரிமுனையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 9-ம் தேதி மதியம் கல்லூரி முடித்துவிட்டு தனது நண்பர்களுடன் மின்சார ரயிலில் சென்றுள்ளார். 


சுமார் 12.20 மணியளவில் ராயபுரத்திற்கும் வண்ணாரப்பேட்டைக்கும் இடையே சென்று கொண்டிருக்கும் ரயிலில் தொங்கியபடி சாகசம் செய்துள்ளார். அப்போது மின் கம்பத்தில் அடிப்பட்டு ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்டார். உடன் சென்ற நண்பர்கள் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி சம்பவ இடத்திற்கு வந்த பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் அபிலாஷ் சுய நினைவின்றி கிடந்துள்ளார். 

பின்னர், ஸ்டான்லி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு அவரை தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்த அபிலாஷ் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். 

Korukkupettai Rly PS

அபிலாஷ் ரயிலில் ஏறி பயணம் செய்யும்போது சாகசத்தில் ஈடுபடுவதும் பின், மின் கம்பத்தில் மோதி தூக்கி எறியப்படும் வீடியோ காட்சியானது தற்போது வெளியாகியுள்ளது. நண்பர்கள் வீடியோ எடுத்த நிலையில் அடிப்பட்டு கீழே விழுந்ததும் அச்சத்தில் கத்தக்கூடிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

From around the web