அப்பா அப்பா ! சட்டமன்றத்தில் கண்கலங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

 
CM Stalin

நேற்று சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு நிமிடம் கண்கலங்கி நின்ற போது செய்வதறியாது தவித்தார் சபாநாயகர் அப்பாவு.

மாணவிகளுக்கான புதுமைப் பெண் திட்டத்தைப் பற்றி பேசும் போது, போகுமிடமெல்லாம் மாணவிகள் என்னை அப்பா, அப்பா என்று அழைக்கிறார்கள் என்று சொன்ன முதலமைச்சர் ஒரு நிமிடம் அடுத்துப் பேச முடியாமல் கண்கலங்கி விட்டார். அவையில் பெருத்த அமைதி நிலவியது. முதலமைச்சரைக் கவனித்த சபாநாயகர் அப்பாவு, என்ன சொல்வதென்று தெரியாமல் தவித்தார். முதலமைச்சரிடம் ஏதாவது சொல்லலாமா என்று அப்பாவு தவித்ததையும் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.

பின்னர் பேசிய முதலமைச்சர், இந்த மாணவிகள் என் மீது வைத்திருக்கும் அன்பு ஒன்றே போதும், இந்தத் திட்டத்தின் வெற்றியைச் சொல்வதற்கு. இது மக்களுக்கான விடியும் அரசு, எதிர்க்கட்சிகளுக்கு இல்லை. 6 தடவை ஆட்சியில் இருந்து மக்களுக்கான பணிகளை செய்துள்ளது திமுக தலைமையிலான அரசு. அடுத்தத் தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று 7 வது தடவையும் ஆட்சி அமைக்கும் என்பதில் சந்தேகமில்லை. மக்களுக்கும் சந்தேகமில்லை என்று பேசினார்

From around the web