கோடிக்கணக்கில் கடன்... தூக்கில் தொங்கிய தம்பதி.. அழுகிய நிலையில் சடலம்... கோவையில் அதிர்ச்சி சம்பவம்!!

 
Coimbatore Coimbatore

தொண்டாமுத்தூரில் கணவன், மனைவி தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாசாமி (35). இவர் ஜெராக்ஸ் கடை மற்றும் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் விற்பனை தரகராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி வெண்ணிலா (30). இவர்கள் இருவரும் 7 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

suicide

இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன் சொந்தமாக வீடு கட்டி வசித்து வந்ததனர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக அய்யாசாமியின் வீடு திறக்காமலேயே இருந்த நிலையில், வீட்டில் இருந்து நுர்நாற்றம் வீசியதாக தெரிகிறது. 

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் இருவரும் தூக்கில் தொங்கியவாறு சடலமாக கிடந்துள்ளனர்.

Thondamuthur PS

இதையடுத்து இருவரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், அய்யாச்சாமிக்கு ரூ.2.5 கோடி கடன் இருந்ததாகவும், அன்மையில் கட்டிய வீடும் கடன் வாங்கி கட்டியதால் சிரம்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web