உரிமைகளுக்கான ஒன்று திரட்டல்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

தமிழ்நாட்டின் உரிமைகளுக்கான ஒன்று திரட்டல் என ஓரணியில் தமிழ்நாடு என்னும் திமுக உறுப்பினர் சேர்க்கைப் பணி ஜூலை 1 முதல் தொடங்க உள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களை திமுக நிர்வாகிகளுக்கு காணொலி சந்திப்பு மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்
”நாளும் இந்திமொழித் திணிப்பு , கீழடியில் தமிழர் தொன்மை மறைப்பு
, தமிழ்நாட்டுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய நிதி மறுப்பு,
நீட் எனும் பலிபீடம் கொண்டு மாணவர்கள் உயிர் பறிப்பு,
தொகுதி மறு சீரமைப்பு மூலம் தமிழ்நாட்டின் அரசியல் வலிமை குறைப்பு
இப்படி தமிழர்களைத் தொடர்ந்து சீண்டிப் பார்க்கும் தமிழினப் பகைவர்களுக்கும், துணைபோகும் துரோகிகளுக்கும் எதிராக ஓரணியில் தமிழ்நாடு.
ஜூலை 1 முதல் தமிழ்நாட்டின் அனைத்துக் குடும்பங்களையும் நம் மண், மொழி, மானம் காக்க ஒன்றிணைக்கும் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை வெற்றிகரமாக நிறைவேற்றிடக் கழகத்தினருக்கு வழிகாட்டுதல்களை வழங்கினேன்.
இது வெறுமனே உறுப்பினர் சேர்க்கைப் பணி அல்ல, நம் உரிமைகளுக்கான ஒன்றுதிரட்டல்!” என்று கூறியுள்ளார்.