தொடர் கனமழை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

 
Leave

கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள்தமிழ்நாடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

Rain

அந்த வகையில், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மயிலாடுத்துறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ. 14) ஒருநாள் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Leave

இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ. 14) ஒருநாள் விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. மேலும் மிக கனமழை மற்றும் கனமழை உள்ள மற்ற மாவட்டங்களுக்கும் ஆட்சியர்கள் விடுப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web