தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸ்.. சித்தராமையாவுக்கு முதல்வர் வாழ்த்து!!

 
Rahul  Sonia MKS

ராகுல் காந்தி, சோனியா காந்தி, சித்தராமையாவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ்பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் பதவிக்காலம் வருகிற 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டமன்றத்திற்கு கடந்த 10-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. 

இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில், 129 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் 129 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுகிறது. 

Karnataka

அதேவேளை, 66 தொகுதிகளில் மட்டும் முன்னிலையில் உள்ள பாஜக கர்நாடகத்தில் ஆட்சியை இழக்கிறது. கடந்த முறை 104 தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்ற நிலையில் இந்த முறை 66 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. மேலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 22 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் 7 இடங்களில் முன்னிலையில் உள்ளனர். 

இதன் மூலம் 132 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுன் ஆட்சி அமைக்க உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

Karnataka

இந்த நிலையில், கர்நாடகாவில் பாஜாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு தொலைபேசியின் மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளர்.

From around the web