தோழர் இரா. நல்லகண்ணு 100 - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

 
MK Stalin Nallakannu MK Stalin Nallakannu

தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவரான கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணுவின் 100வது பிறந்தநாளையொட்டி, மூத்த தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரு தலைவர்களையும் பாராட்டிப் பேசினார்.

”பொதுவாழ்வில் நம் எல்லோருக்கும் முன்னத்தி ஏராக - வழிகாட்டியாக - எடுத்துக்காட்டாக வாழும் தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களின் தியாக வாழ்வைப் போற்றிப் புகழுவோம்! விழா எடுத்த அய்யா பழ.நெடுமாறன் அவர்களுக்கும் என் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்! கண்ணீர் சிந்திய மக்களின் வாழ்வு நலம் பெற - வளம் பெற செந்நீர் சிந்திய உத்தமரான நல்லகண்ணு அய்யாவின் வழிகாட்டுதலில் மக்களுக்கான திராவிட - பொதுவுடைமைக் கருத்தியலைச் செழும்பயிராய் வளர்ப்போம்!” என்று முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்திப் பேசினார்.


 

From around the web