புதிய பொலிவுடன் விரைவில்... ஆவன் நிறுவனம் ட்வீட்!!

 
Aavin

விரைவில் புதிய பொலிவுடன் ஆவின் பால் என ஆவன் நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் அல்லது ஆவின் நிறுவனம் என்பது பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் மூலம் பால், தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பால்கோவா, மைசூர்பாக், ஐஸ்கிரீம் முதலான பால் உபயோக பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

ஆவின் நிறுவனம் சார்பாக நாள்தோறும் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் சராசரியாக 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில் சுமார் 30 லட்சம் லிட்டர் பால் நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. ஆவின் பால் பாக்கெட்கள் நீலம், பச்சை, மெஜந்தா, பழுப்பு ஆகிய நிறங்களில் வருகிறது. இந்த ஒவ்வொரு வண்ணங்களுக்குப் பல வித்தியாசங்கள் உள்ளன.

Aavin

ஆவின் பாலில் அதிகம் பலரும் வாங்கும் பால்பாக்கெட் நீல நிற பால். இதனை நைஸ் பால் என்று சொல்வார்கள். அதற்கு காரணம் என்னவென்றால் இந்த பால் அனைவருக்கும் ஏற்றது. அதாவது மீடியமான கொழுப்பு இதில் உண்டு. அதனால் எளிதில் ஜீரணம் ஆகும். இதனை குழந்தைகள், நோயாளிகள், வயதானவர்கள் என அனைவருமே உட்கொள்ளலாம். 100 கிராம் பாலில் 3 கிராம் கொழுப்புச் சத்து உள்ளது.

பிங்க் பாலை டயட் பால் என்று கூறுவார்கள். அதாவது இது ஆரோக்கியத்துக்கானது. நோயாளிகள், வயதானவர்கள் என கொழுப்பு வேண்டாம் என ஒதுக்குபவர்கள் இந்த பாலை தேர்ந்தெடுக்கலாம். இதில் கொழுப்பு மிக மிக குறைவு. 100 கிராம் பாலில் 1.5 கிராம் கொழுப்பு மட்டுமே உள்ளது.

நீல நிறத்துக்கு அடுத்த இடத்தைப் பிடிப்பதுதான் பச்சை பால். இதில் கொழுப்பு சற்று அதிகம். அதனால் இந்த வகை பாலை வயதானவர்கள், நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக 40 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே எடுத்துக்கொள்ள ஏதுவான பால் என கூறப்படுகிறது. 100 கிராம் பாலில் 4.5 கிராம் கொழுப்பு உள்ளது.


ஆவின் பாலில் அதிக கொழுப்புச் சத்து கொண்ட பால் என்பதே இந்த ஆரஞ்சு நிற பால். கொழுப்பு அதிகம் என்பதால் வயதானவர்களும், நோயாளிகள் இந்த பால் பக்கம் போகவே வேண்டாம். கொழுப்பும் அடர்த்தியும் அதிகம் என்பதால், இதனை ஃபுல் க்ரீம் பால் என்பார்கள். 100 கிராம் பாலில் 6 கிராம் கொழுப்பு உள்ளது.

இந்த நிலையில், விரைவில்.. அதே சிறந்த தரத்தில் புதிய பொலிவுடன் உங்கள் ஆவன் என ஆவன் நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.

From around the web