சென்னை உட்பட 4 மாவட்டங்களில் வரும் 11-ம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு!

 
College Students

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்லூரிகளும் வரும் 11-ம் தேதி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. 36 மணி நேரம் இடைவிடாது கொட்டிய கனமழையால் 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மழை நின்று சுமார் ஐந்து நாள்களாகியும் பல இடங்களில் இன்னும் வெள்ளநீர் வடியவில்லை.

Rain

இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 4 மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் வரும் 11-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

College

இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் உருவான கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் வரும் 11-ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web