ஷேர் ஆட்டோ மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலி.. தந்தை கண் முன்னே பரிதாபம்!

 
chennai chennai

கும்மிடிப்பூண்டி அருகே ஷேர் ஆட்டோ மீது கன்டெய்னர் லாரி நேருக்கு நேராக மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் தந்தை கண் முன்னே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சத்யவேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முரளி (36). இவர், ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மகன் திலீப் குமார் (17). ஆந்திர மாநிலம் தடாவில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஷேர் ஆட்டோவில் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள பொம்மாஜிகுளம் பகுதிக்கு தனது மகன் திலீப்குமாருடன் வந்து விட்டு மீண்டும் சத்யவேடு நோக்கி முரளி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

Accident

இந்த நிலையில், பொம்மாஜிகுளம் சோதனை சாவடி அருகே சாலையோரம் தனது ஷேர் ஆட்டோவை நிறுத்தி விட்டு முரளி, இயற்கை உபாதை கழிக்கச்சென்றார். ஆட்டோவில் திலீப்குமார் மட்டும் அமர்ந்து இருந்தார். அப்போது, சத்யவேட்டில் இருந்து வந்த கன்டெய்னர் லாரி ஒன்று, ஆட்டோ மீது நேருக்கு நேராக மோதியது.

இதில் ஆட்டோ தூக்கி வீசப்பட்டு சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் உடல் நசுங்கிய கல்லூரி மாணவர் திலீப்குமார், தனது தந்தை முரளி கண் முன்பே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதிரிமேடு போலீசார், திலீப் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Padirivedu PS

பின்னர் இந்த சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் பாதிரிவேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் தந்தை கண் முன்னே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web