விபத்தில் சிக்கி துடிதுடித்த கல்லூரி மாணவன்.. ஓடி வந்து காப்பற்றிய கனிமொழி.. நெகிழ்ச்சி சம்பவம்

 
Kanimozhi

கோவை அருகே சாலை விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி. கோவையில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு கோவையில் இருந்து திருப்பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவிநாசி நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த மாணவர் ஒருவர் லாரியில் மோதி விபத்தில் சிக்கிய நிலையில் மயங்கி கிடந்துள்ளார்.

Coimbatore

விபத்தில் சிக்கிய மாணவரை மீட்டு, திமுக நிர்வாகி ஒருவரின் காரில் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கனிமொழி அனுப்பி வைத்தார். அதனைத் தொடர்ந்து, மாணவரை சேர்த்துள்ள கோவை பிரேமா மருத்துவமனைக்கு நேரில் சென்ற கனிமொழி எம்.பி. மாணவரின் உடல் நிலையை கவனித்து தெரிவிக்குமாறு மருத்துவரிடம் கூறினார்.

Coimbatore

விபத்தில் சிக்கிய மாணவர் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் கோவை Dr. NGP கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் படித்து வரும் ராபின் என்பது தெரிய வந்தது. விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த மாணவர் உயிருக்கு போராடி கொண்டிருந்த சூழலில், அவரை சிகிச்சைக்கான ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் கனிமொழி எம்.பி களமிறங்கி காரில் மருத்துவமனை அனுப்பி வைத்தார்.

From around the web