கூட்டணி ஆட்சி.. எடப்பாடி பழனிசாமியின் பயம்?

ஒன்றிய அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியான நிலையில் 2026ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமையும் என்று அமித் ஷா சொன்னார்.
பாஜகவுடன் கூட்டணி அறிவிப்பு வந்ததுதும் கட்சியின் தொண்டர்கள் மூத்த தலைவர்களிடையே பெரும் பதட்டம் தொற்றிக் கொண்டது. அதுவும் கூட்டணி ஆட்சி என்றதும் இனி கட்சி அவ்வளவு தான் என்ற கவலையே தொண்டர்களுக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடகா, மகாராஷ்ட்ரா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், பீகார் மாநிலங்களில் கூட்டணிக் கட்சியை எப்படி ஒழித்தார்கள் என்ற விவரங்கள் எல்லாம் அதிமுக தொண்டர்களுக்கு அத்துப்படியாகவே தெரிந்துள்ளது.
2026ல் கட்சியா ஆட்சியா என்றால் கட்சியே என்று தான் தொண்டர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் அமித் ஷா கூட்டணியின் ஆட்சி என்று தான் சொன்னாரே ஒழிய கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதற்குப் பதிலளித்த பாஜக புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் கூட்டணி ஆட்சி பற்றி தேர்தலுக்குப் பிறகு அமித் ஷாவும் எடப்பாடி பழனிசாமியும் கலந்து பேசி முடிவெடுப்பார்கள் என்று கூறியுள்ளார்.
கூட்டணி அதிர்ச்சியிலிருந்தே மீளாமல் உள்ள அதிமுகவினருக்கு கூட்டணி ஆட்சி மேலும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அதன் வெளிப்பாடே எடப்பாடி பழனிசாமியின் பேச்சு என்று கூறப்படுகிறது.