வேட்டி சட்டையுடன் குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடிய முதலமைச்சர்!!

 
Stalin Family

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன், மகள் குடும்பத்துடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடியுள்ளார். சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதலமைச்சரின் வீட்டிற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா மற்றும் பிள்ளைகளுடன் வந்திருந்தார். ,முதலைச்சரின் மகள் செந்தாமரை கணவர் சப்ரீசன் மற்றும் பிள்ளைகளுடன் வந்திருந்தார்.

பாரம்பரிய வேட்டி சட்டை அணிந்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணைவியார் துர்கா ஸ்டாலின் பிள்ளைகள், பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகப் பொங்கல் திருநாளைக் கொண்டாடினார்கள். பின்னர் அறிவாலயம் சென்ற முதலமைச்சர் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரையிலும் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளை சந்தித்து பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்து பரிசுகளை வழங்கினார்.

”இந்திய ஒன்றியத்தின் ஒப்பற்றத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்களிடமும் - அன்னையாரிடமும், தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு குடும்பத்தாருடன் இன்று காலை வாழ்த்து பெற்றோம். நம் பண்பாட்டுத் திருநாளாம் பொங்கல் பண்டிகையைப் போற்றி மகிழ்வோம்” என்று துணை முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


 


 

null


 

From around the web