மின்சாரம் தாக்கி 7-ம் வகுப்பு மாணவன் பரிதாப பலி.. திருச்சியில் சோகம்

 
Thuvakudi

திருவெறும்பூர் அருகே மின்சாரம் தாக்கி 7-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் கிருஷ்ணகுமார் (12). பெல் வளாகத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் (அக். 22) வீட்டிலிருந்த கிருஷ்ணகுமார் துணிகளை அயன் செய்துள்ளார்.

boy-dead-body

அப்போது திடீரென அயன் பாக்சில் மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் பலத்த காயம் அடைந்தான். இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கிருஷ்ணகுமாரை பரிசோதித்த மருத்தவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Thuvakudi PS

இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web