4-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசு பள்ளி ஆசிரியர் கைது!

 
Salem

சேலம் அருகே 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள புக்கம்பட்டியில், அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஆசிரியராக ஜியாவுல் அக் (44) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் சிலருக்கு ஜியாவுல் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமிகள் தங்களது பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.

Rape

இதனைத் தொடர்ந்து, பெற்றோர் பள்ளியின் தலைமை ஆசிரியர் தனம் என்பவரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் தனம், மேச்சேரி காவல் நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று புகார் அளித்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஜியாவுல் தலைமுறைவானார்.

அவரை கைது செய்வதற்காக மேச்சேரி மகளிர் காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ஜியாவுல்லை மேச்சேரி மகளிர் போலீசார் இன்று காலை கைது செய்துள்ளனர். இதையடுத்து அவரை மேச்சேரி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Mecheri

மேலும் அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார், வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஜியாவுல் மேலும் சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கலாம் என போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதனால் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் கவுன்சிலிங் நடத்த போலீசாரும், பள்ளிக்கல்வித் துறையினரும் முடிவு செய்துள்ளனர்.

From around the web