11-ம் வகுப்பு பள்ளி மாணவி கர்ப்பம்.. போலீஸ் விசாரணைக்கு பயந்து காதலன் எடுத்த விபரீத முடிவு

 
vellore

வேலூர் அருகே பள்ளி மாணவி கர்ப்பமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், விசாரணைக்கு பயந்து காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு அருகே கள்ளிச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராபர்ட். இவரது மகன் தீனா (23). கட்டிட தொழிலாளியான இவர், 11-ம் வகுப்பு படித்து வரும் 16 வயது மாணவியை காதலித்து வந்ததாகவும், இருவரும் நெருங்கி பழகியதில் மாணவி 6 மாத கர்ப்பமானதாகவும் புகார்கள் எழுந்தது. 

Suicide

மாணவி கர்ப்பமானது அவரது பெற்றோருக்கு ஒரு கட்டத்தில் தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஊர் பெரியவர்களிடம் சென்று மகள் கர்ப்பமானது குறித்து நியாயம் கேட்டு முறையிட்டுள்ளார்கள். அதன்பேரில் நேற்று காலை ஊர் பெரியவர்கள் தீனாவை அழைத்து விசாரித்துள்ளார்கள்.

இதனால் மாணவி கர்ப்பமானது குறித்து தன்மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்வார்களோ என்று அச்சம் அடைந்த தீனா, விசாரணைக்கு பயந்து தனது வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டுக் கொண்டார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் தீனாவை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

Peranampattu PS

இதுகுறித்து தகவல் அறிந்த பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் நேரில் விசாரணை நடத்தினார்கள். பின்னர் கட்டிட தொழிலாளி தீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்மந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

From around the web