மனைவி, மகளுக்கு வறுபுறுத்தி கொடுத்த தூக்க மாத்திரை.. குடும்பத்துடன் விபரீத முடிவு எடுத்த சித்த மருத்துவர்..!

 
chennai

சென்னையில் சித்த மருத்துவர் ஒருவர் மனைவி, மகளுக்கு வற்புறுத்தி தூக்க மாத்திரை கொடுத்த தானும் சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சாலிகிராமம் திலகர் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதல் மாடியில் வசித்து வந்தவர் சித்த மருத்துவர் கங்காதரன் (60). இவர் வீட்டிலேயே கிளினிக் வைத்து சித்த மருத்துவம் பார்த்து வந்தார். இவரது மனைவி சாருமதி (57). இந்த தம்பதிக்கு ஜனப்பிரியா (24) என்ற மகள் உள்ளார். சாருமதி நெடுஞ்சாலை துறையில் கண்காணிப்பாளராகவும், மகள் ஜனப்பிரியா ப்ளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தனர்.

கடந்த 2 வருடங்களாக சித்த மருத்துவ தொழில் நஷ்டத்தில் இயங்கி வந்ததால் கங்காதரன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல் நேற்று நள்ளிரவு இருவருக்கும் பிரச்சினை ஏற்படவே, கங்காதரன் மருத்துவத்திற்காக வைத்திருந்த தூக்க மாத்திரைகளை வற்புறுத்தி மனைவி சாருமதி மற்றும் மகள் ஜனப்பிரியா ஆகியோருக்கு கொடுத்துள்ளார். 

man-attempts-suicide

பின்னர் அவரும் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்நிலையில், ஜனப்பிரியா தனது உறவினரான ஹேமலதாவிற்கு இதுகுறித்த குறுஞ்செய்தியை அனுப்பி உள்ளார். இதனைக் கண்ட ஹேமலதா உடனடியாக அவரது நண்பருடன் வீட்டிற்கு வந்த போது ஜனப்பிரியாவின் வீடு உள்பக்கம் பூட்டி இருந்தது. அவர் உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருகம்பாக்கம் போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மூவரும் மயங்கிய நிலையில் கீழே கிடந்தனர். அவர்களை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், ஏற்கனவே கங்காதரன், அவரது மகள் ஜனப்பிரியா ஆகியோர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சாருமதிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Virugambakkam

இந்த சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக உயிரிழந்த ஜனப்பிரியா செல்போனை கைப்பற்றி சைபர் ஆய்வகத்திற்கு போலீசார் அனுப்பி உள்ளனர். தந்தை, மகள் சாவிற்கு காரணம் கடன் பிரச்சனையா அல்லது வேறு காரணம் என்ன என்பது குறித்து பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web