முதலமைச்சரின் தாயார் மருத்துவமனையில் அனுமதி!!

 
Dayalu Ammal CM Stalin

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயாரும் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் மனைவியுமான தயாளு அம்மாள் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்தில் வசித்து வருகிறார். இவருக்கு நேற்றிரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தயாளு அம்மாள் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.  தயாளு அம்மாவின் உடல் நிலை தொடர்ந்து  கண்காணிக்கப்பட்டு வருகிறது. தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலறிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று தாயாரின் உடல்நிலை குறித்தும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

தயாளு அம்மாளின் உடல்நலம் குறித்த மருத்துவ அறிக்கை  இதுவரை வெளியாகவில்லை.

From around the web