புதிய மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

 
CM-Stalin

மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். 

தமிழ்நாட்டில் நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அண்மையில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், ஒரே நாளில் 16 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, அங்கு புதிய மாவட்ட ஆட்சியர்களை நியமித்து, தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, அரியலூர், புதுக்கோட்டை, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

Stalin

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 10 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஜெ. ஆனி மேரி ஸ்வர்ணா, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.எஸ்.மெர்சி ரம்யா, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.உமா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர், மதுரை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.சங்கீதா, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பி.விஷ்ணு சந்திரன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டி.கிறிஸ்துராஜ், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சங்கரா, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் எம்.என்.பூங்கொடி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு ஆகியோருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாடினார். 

MKS

இந்த ஆலோசனை கூட்டத்தில், கள்ளச்சாராயம் ஒழிப்பு, அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய பணியாற்ற வேண்டும், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதேபோல் பல்வேறு விதமான மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன, அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
 

From around the web