ஆசிரியர்களின் நலனைக் காக்க புதிய திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

 
MKS

ஆசிரியர் நலனுக்காக ரூ. 225 கோடியில் புதிய திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் ஆசிரியர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். ஆசிரியர்களின் நலனைக் காக்க புதிய திட்டங்களை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாகவும் அதற்காக ரூ. 225 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

teacher

ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள்

  • மாறிவரும் கற்றல், கற்பித்தல் முறைகளுக்கு ஏற்ப தங்களை சிறப்பாக மெருகேற்றிக் கொள்வதற்கென அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி (Tablet) வழங்கப்படும்.
  • மாணவர் வாழ்க்கை ஏற்றம்காண அயராது உழைக்கும் ஆசிரியர் பெருமக்களின் உடல்நலம் காக்க அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும்.
  • அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடையே சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள், வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.
  • உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்காக தற்போது ஆசிரியர் நல நிதியிலிருந்து வழங்கபட்டு வரும் கல்விச் செலவு (tuition fee) ரூ.50 ஆயிரம் வரை உயர்த்தி வழங்கப்படும்.

இத்தகு திட்டங்கள் சுமார் 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்ற செய்தியை இந்தத் தருணத்தில் உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

From around the web