முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் 

 
MK-Stalin-says-pongal-tamil-new-year-wishes MK-Stalin-says-pongal-tamil-new-year-wishes

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமுடன் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதில் இருந்து ஓய்வின்றி பல இடங்களுக்கு சென்று கள ஆய்வுப் பணி மேற்கொண்டு வருகிறார். அதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். மேலும், அடுத்தடுத்து பல்வேறு அரசு விழாக்களுக்கும் சென்று மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைப்பது, மக்களை சந்திப்பது, நீண்ட நேரம் உரையாற்றுவது என ஓய்வு எடுக்காமல் பணியாற்றி வருகிறார். 

MKS

இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த 3-ம் தேதி முதல், அரசு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவில்லை. குறிப்பாக, சென்னை பெசன்ட் நகரில், ‘நடப்போம் நலன் பெறுவோம்’ என்ற திட்டத்தை தொடங்கி வைக்க இருந்த நிலையில், அதிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாக சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியான நிலையில்,  சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

MAS

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். பருவகாலத்தில் வரும் வைரஸ் காய்ச்சலால் முதல்வர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் முதல்வர் ஓய்வில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

From around the web