முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்! சந்திப்பாரா எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி?
Jan 11, 2025, 06:12 IST
சட்டமன்றத்தில் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
இதற்குப்பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் புகார் கிடைத்த அடுத்த நாளே எஃப்.ஐ.ஆர் போடப்பட்டு விட்டது. பொள்ளாச்சி மாணவிகள் விவகாரத்தில் 12 நாட்களாக எஃப்.ஐ.ஆர் போடப்படவில்லை. நான் ஆதாரத்தோடு சொன்னதை நிருபிக்கிறேன். எதிர்க்கட்சித் தலைவர் அவருடைய குற்றச்சாட்டை ஆதாரத்துடன் நிருபிப்பாரா? என்று சவால் விடுத்தார்.
இந்த சவாலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதில் சொல்லாத நிலையில், இருவரும் ஆதாரங்களை நாளை என்னிடம் தாருங்கள் என்று சபாநாயகர் அப்பாவு விவாதத்தை முடித்து வைத்தார்.