சென்னை டி20 போட்டி! மின்சார ரயில்கள் நேரம் மாற்றம்!

இந்தியா - இங்கிலாந்து இடையே டி20 கிரிக்கெட் போட்டி வருகிற சனிக்கிழமை, ஜனவரி 25ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரை செல்லும் பறக்கும் ரயில் சேப்பாக்கம் வழியாக செல்கிறது. சேப்பாக்கதில் ஒரு ரயில் நிறுத்தமும் உள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே இயக்கப்படும் மின்சார ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கடற்கரையிலிருந்து இரவு 9.50 மணிக்கு புறப்படவேண்டிய ரயில் 10 நிமிடம் தாமதமாக 10:00 மணிக்குப் புறப்படும். 10:20 க்குப் புறப்படவேண்டிய வேளச்சேரி ரயில் 10:30 மணிக்குப் புறப்படும்.
வேளச்சேரியிலிருந்து இரவு 10 மணிக்கு புறப்படும் ரயில் சேப்பாக்கத்தில் 10 நிமிடம் நின்று செல்லும் என்று எம்.ஆர்.டி.எஸ் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. சேப்பாக்கம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சட்டமன்றத் தொகுதியும் ஆகும்.