கணவரை இழந்த பெண்ணுடன் கள்ளக்காதல்... வடமாநில தொழிலாளியை கத்தியால் குத்தி கொன்ற 3 பேர் கைது!

 
Trichy

திருச்சி கோட்டை ரயில் நிலையப் பகுதியில் வட மாநில தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்தவர் விக்ரம் (34). இவர் திருச்சி புத்தூா் அரசு தலைமை மருத்துவமனை எதிரே உள்ள பல்வேறு உணவகங்களில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி மாலை திருச்சி கோட்டை ரயில் நிலையப் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு பெண் இரு ஆண்கள் சேர்ந்து ஒருவரை தகராறு செய்து சரமரியாக தாக்கியுள்ளனர்.

murder

இதையடுத்து மாரிஸ் திரையரங்கம் நோக்கி ஓடிய விக்ரம் என்பவரை, அவா்கள் விரட்டிச் சென்று கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து 3 பேரும் தப்பிச் சென்றுவிட்டனா். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த விக்ரம் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

இதில் திருச்சி உறையூா் விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த தீபிகா (27), கோட்டை கீழ சிந்தாமணி பாலா (34), சந்துக்கடை பகுதி கணேசன் (35) ஆகியோர் எனத் தெரியவந்தது. அந்த மூன்று பேரும் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Bangladeshi-Teen-Arrested-While-Sneaking-Into-India

கணவரை இழந்து கைக்குழந்தையுடன் சத்திரம் பகுதியில் பானி பூரி விற்கும் தீபிகாவுக்கும் மற்ற மூவருக்கும் தொடா்பு இருந்ததும், இதுதொடா்பாக விக்ரமை பாலா, கணேசன் ஆகியோா் கண்டித்தபோது ஏற்பட்ட தகராறில் இருவரும் சோ்ந்து அவரைக் கொன்றதும் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web