ஆளுநர் இல்லத்தை மாற்றுங்கள்! சட்டமன்றத்தில் கோரிக்கை!!
![Ezhilan](https://a1tamilnews.com/static/c1e/client/82560/uploaded/6b5c0ad1dd2da666c7f49b394fb11a4d.jpg)
மான்களைப் பாதுகாக்க ஆளுநர் இல்லத்தை மாற்ற வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன், கோரிக்கை வைத்துள்ளார். சட்டமன்றத்தில் கேள்விநேரத்தில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன், 1974ம் ஆண்டு சட்டமன்றத்தில் ராஜமன்னார் அறிக்கையின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தை நினைவு படுத்திப் பேசினார்.
மேலும் பேரிடர்களைப் பார்க்கும் சென்னைவாசியாக, பசுமைவழித்தடத்தை அதிகரிக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. மான்கள் சரணாலயத்தை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. ஆளுநர் என்பவர் அமைச்சரவையின் முடிவுகளின் அடிப்படையில் தான் இருக்க வேண்டும். அமைச்சர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதியில் ஆளுநருக்கு வீடு ஒதுக்கித் தரவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். நீதிபதிகளின் இல்லங்களும் அருகே தான் உள்ளது. நீதிபதிகள், அமைச்சர்கள் இல்லங்களுக்கு அருகே ஆளுநருக்கு இடம் கொடுத்து, இயற்கை பேரிடரிலிருந்து நம்மைக் காக்க ஒரு பசுமைவழித்தடத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன் என்று எழிலன் கேட்டுள்ளார்.
ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், மார்ச் 3ம் தேதி கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை மாற்றுத்திறனாளிகள் நாளாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தா எழிலன்.
சென்னையில் மான்களை பாதுகாக்க சரணாலயம் அமைக்க ஆளுநர் இல்லத்தை மாற்ற வேண்டும். அவருக்கு அமைச்சர்கள், நீதிபதிகள் குடியிருப்பு பகுதியில் இல்லம் ஒதுக்கி தர வேண்டும்.
— DMK IT WING (@DMKITwing) January 10, 2025
- திமுக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் @Dr_Ezhilan அவர்கள் கோரிக்கை #tnassembly2025 pic.twitter.com/kv9ZYbCuqf