செல்போனுக்குத் தடை! ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலிலும் அமல்!!
Jan 26, 2025, 07:47 IST

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு உள்ளேயும் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. கோவில் முன்பு செல்போன்கள் பாதுகாக்கும் அறை அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அறையில் வைக்க ஒவ்வொரு செல்போனுக்கும் ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஏற்கனவே இந்த நடைமுறை திருச்செந்தூர் முருகன் கோவில், பழனி முருகன் கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைமுறையில் உள்ளது. ஏனைய முக்கிய கோவில்களிலும் இந்தத் தடை அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.