டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கட்டாயம்.. மீறினால் உரிமம் ரத்து.. டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு

 
Tasmac

தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மற்றும் தனியார் பார்களில் சிசிடிவி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் நடத்தி வருகிறது. இந்நிறுவனம் தமிழ்நாட்டில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்யும் உரிமைத்தை பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசின் வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. தற்போது, 5,425 டாஸ்மாக் கடைகள் தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன. தினந்தோறும் சராசரியாக ரூ.100 கோடி மதிப்பிலான சரக்கு வகைகள் விற்பனையாவதாக கூறப்படுகிறது.

TASMAC

இதனிடையே இந்தியாவில் மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதால் தேர்தல் ஆணையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் அனைத்து மதுபான கூடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த மதுபான நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுபான மற்றும் தனியார் பார்களுக்கு மதுபான நிர்வாகம் கடிதம் அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில், “நாடாளுமன்ற தேர்தலின்போது சட்டவிரோதமான மதுபாட்டில் விற்பனை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tasmac

தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி, மதுபானக் கடைகளில் சிசிடிவி கேமராவை பொருத்தவும், அதுதொடர்பான புகைப்படங்களை அனுப்பவும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிசிடிவி பொருத்தாவிட்டால், மதுக்கூட ஒப்பந்ததாரரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

From around the web