அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு!!

 
EPS

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட 6 மீது அவனியாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சிவகங்கையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் சென்றார். அப்போது ராஜேஷ்வரன் என்ற வாலிபர் அவரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. மதுரை விமான நிலையத்தில் இருந்து பயணிகளை பேருந்தில் வெளியில் அழைத்து வந்த போது எடப்பாடி பழனிசாமியுடன் பயணம் செய்தனர்.

Madurai

இந்த நிலையில்தான் சிங்கம் புணரியை சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவர் எடப்பாடி பழனிசாமியை பார்த்து அவருக்கு எதிராக பேருந்துக்குள் வைத்தே கோஷம் எழுப்பினார். துரோகத்தின் அடையாளம் எடப்பாடியார் என்று கோஷமிட்டார். மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தனது மொபைலில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதை அவர் ஃபேஸ்புக் லைவ்வில் வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாவலர் அவரை தடுத்து நிறுத்தினார். எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கோஷமிட்டவர் சிங்கப்பூரிலிருந்து திரும்பியவர் என்பதும் அவர் அமமுக கட்சி ஆதரவாளர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Avaniapuram PS

இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாக ராஜேஷ்வரன் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமுர்த்தி, மணிகண்டன் உள்ளிட்டோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் சமூக வலைதளங்களில் எடப்பாடி பழனிச்சாமி குறித்து விமர்சனம் செய்ததாக அமமுக நிர்வாகி ராஜேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

From around the web