மதுராந்தகம் அருகே பைக் மீது கார் மோதி விபத்து.. எஸ்.ஐ. உட்பட 2 பெண் போலீசார் மரணம்!

 
Melmaruvathur

மதுராந்தகம் அருகே ஒரே காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் போலீஸ் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மாதவரம் பால் பண்ணை காவல் நிலையம் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் ஜெயஸ்ரீ (38). அதே காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர் நித்யா (33). இவர்கள் இருவரும், வழக்கு ஒன்றில் தேடப்படும் நபரை பிடிப்பதற்காக இன்று காலை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

dead-body

அப்போது, மதுராந்தகம் அடுத்த சிறுநாகலூர் என்ற இடத்தில் மகளிர் போலீசார் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது, பின்னால் வந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மோதியது. இதில், பலத்த காயமடைந்த உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேல்மருவத்தூர் போலீசார், காயமடைந்த காவலர் நித்யாவை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், எஸ்ஜயின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காவலர் நித்யாவும் சிகிச்கை பலனின்றி உயிரிழந்தார்.

Melmaruvathur PS

இச்சம்பவம் தொடர்பாக மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரே காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் போலீஸ் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

From around the web