கார் மோதி அப்பளம்போல் நொறுங்கிய ஆட்டோ... பச்சிளம் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்த சோகம்!!

 
Ramnad

ராமநாதபுரம் அருகே காரும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்தில் பச்சிளம் குழந்தை, தாய் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை பகுதியில் வசித்து வருபவர் மீனவர் சேதுராஜா. இவரது மகள் சுமதி. சுமதியை திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த சின்னகடையான் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். தலை பிரவத்திற்காக சொந்த ஊரான வேதாளைக்கு வந்து  அரசு மருத்துவ மனையில் சுமதி  சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

கடந்த வாரம் பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டு கடந்த 17-ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் மருத்துவர்கள் நேற்று வீட்டிற்கு செல்லலாம் என கூறியதை தொடர்ந்து ஆட்டோவில் சுமதி, அவரது குழந்தை மற்றும் கணவர் சின்னக்கடையான், தாய் காளியம்மாள் ஆகிய நான்கு பேரும் ஆட்டோவில் வேதாளை நோக்கி சென்றனர்.  

Accident

ராமநாதபுரம் - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நதிப்பாலம் அருகே சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்று திரும்பிய கார் ஒன்று ஆட்டோ மீது மோதியதில் 4 பேர் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

செல்லும் வழியிலேயே, குழந்தையின் தாய் சுமதி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் மலைராஜ் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை மற்றும் குழந்தையின் தந்தை சின்ன அடைக்கான் ஆகிய இருவரும் மரணமடைந்தனர். ஆட்டோவில் சென்ற 4 பேரும் உயிரிழந்த நிலையில், காரில் பயணித்த 4 பேருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

arrest

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார், சென்னையைச் சேர்ந்த கார் டிரைவர் விக்னேஷ் (34) என்பவரை உச்சிப்புளி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web