அரசு பேருந்துகளில் கட்டணம் ரத்து.. அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!!

 
bus-free-for-5years

தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளிலும் 5 வயது வரையுள்ள குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் 8 அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், நகர் மற்றும் புறநகர்ப் பேருந்து சேவைகள் இயக்குகிறது. இதில், சென்னை, விழுப்புரம், மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில், 8,000 நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில், 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு, கட்டணம் இல்லை. 3 வயது முதல் 12 வயது வரையான சிறுவர், சிறுமிகளுக்கு பாதி கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

Bus

இந்த நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது, 5 வயது வரையுள்ள குழந்தைகள் இனி அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார்.

அதனை செயல்படுத்தும் விதமாக, இனி 5 வயது வரை உள்ள குழந்தைகள் கட்டணமில்லாமல் அரசு பேருந்தில் பயணம் செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு அரசிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

TN-Govt

அதில், தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் 5 வயது வரை கட்டணம் ரத்து செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐந்து வயது முதல் 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியர்களிடம் பாதி கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்படுவதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

From around the web