செஞ்சி அருகே பரபரப்பு... வாலிபர் கைது..! வைரலாகும் திருமண பேனர்!!

 
Gingee

செஞ்சியில் வித்தியாசமான கல்யாண போஸ்டரை நண்பர்கள் அடித்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இன்றைக்கு சிறுவர்கள், இளம் தலைமுறையினர், வயதானவர்கள் என வயது வித்தியாசம் பாராமல் அடிமைப்படுத்தக்கூடிய விஷயங்களில் ஒன்றுதான் சோஷியல் மீடியாக்கள். சாப்பிட உணவு கூட இல்லாமல் இருந்துவிடுவோம். ஆனால் ஒரு நாள் கூட சமூக வலைத்தளங்களைப் பார்க்காமல் இருக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டோம்.

இதற்கேற்றால் போல் தான், உலகில் என்ன நடந்தாலும்.. எங்கு நடந்தாலும்.. நொடியில் நம் கண்முன்னே கொண்டு வருவதோடு சில நாள்களுக்கு சோஷியல் மீடியாவை  சில வீடியோக்கள் மற்றும் போஸ்டர்கள் ஆக்கிரமித்து விடுகின்றன. அப்படியொரு போஸ்டர் தான் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

marriage

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை சேர்ந்த அருண் என்பவருக்கும் கனகலட்சுமி என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. இதையொட்டி, திருமணத்திற்காக மணமகன் அருணின் நண்பர்கள் வித்தியாசமாக போஸ்டர் ஒன்றை அடித்திருக்கிறார்கள். 

அதில், செஞ்சி அருகே பரபரப்பு வாலிபர் கைது..! குற்றம்: பெண்ணின் மனதை திருடிவிட்டார். தீர்ப்பு: மூன்று முடிச்சு போடுதல். கைது செய்யும் நாள் 10.2.2023 வெள்ளிக்கிழமை. கைது செய்யும் இடம்: மயிலம் முருகன் திருக்கோயில். தண்டனை வழங்கப்படும் இடம் மனோரஞ்சிதம் திருமண மண்டபம் செஞ்சி. கைதானவர் எம்.அருண். கைது செய்தவர் எஸ்.கனகலட்சுமி. ...சாட்சிகள்...

Gingee

இப்படி போஸ்டர் அடித்து இருக்கிறார்கள். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. தற்போது திருமண விழாக்களில் வித்தியாசமாக போஸ்டர் அடிக்கும் கலாச்சாரம் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. அதற்கு எடுத்துக்காட்டு தான் செஞ்சியில் தற்போது நடந்திருக்கிறது.

From around the web