தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

 
Crackers

தீபாவளி பண்டிகைக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 12-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே பட்டாசுகள், புத்தாடைகள், இனிப்புகள், பலகாரங்கள்தான் நினைவுக்கு வரும். அந்த வகையில் முதல் வரிசையில் உள்ள பட்டாசுகள் ஆண்டுதோறும் புதுவிதமாக விற்பனைக்கு வருகின்றன. இந்த பட்டாசுகள் சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. 

crackers

இந்த பட்டாசுகளில் தரமும் பாதுகாப்பும் அதிகமாகவே இருக்கும். இதனால் விலையும் சற்று அதிகமாக இருக்கும். ஆனால் பாதுகாப்பை விலை கொடுத்து வாங்க தயங்கும் சிலர் விலை குறைந்த கண்களை கவரும் சீன பட்டாசுகளை வாங்குகிறார்கள். இதனால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதுடன் தீவிபத்து நடக்கும் அபாயமும் உள்ளது. இதை ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியும் பலர் சீன பட்டாசுகளையே நாடுகிறார்கள்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகை தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் ஆலோசனை கூட்டங்கள் நடந்து வந்தன. அந்த வகையில் தீபாவளி பண்டிகை அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது. தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

TN-Govt

நீதிமன்ற உத்தரவுபடி தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் பசுமை பட்டாசு மட்டுமே வெடிக்க அனுமதிக்கப்படுகிறது. தீபாவளியன்று காற்றின் தரத்தை மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மாவட்டம் வாரியாக கண்காணிக்கப்படும். அனுமதி அளித்த நேரத்தை தாண்டி பட்டாசு வெடிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிபத்துகளால் காயமடைவோருக்கு சிகிச்சை அளித்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தீபாவளிக்கு விடுப்பு எடுக்கக் கூடாது என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

From around the web