#BREAKING: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு!

 
MKS

தமிழ்நாடு முதல்வர் மு.கஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 நாட்களாக காய்ச்சல் மற்றும் தொண்டை வலி காரணமாக அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த வியாழன் அன்று தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நிலையில், நேற்று மற்றும் இன்று நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன.

MKS

இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல் மற்றும் இருமல் இருந்த நிலையில், அவருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர். 

Medical Report

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில், அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதாகவும், இதனை தொடர்ந்து அவர் சில நாட்களுக்கு  ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

From around the web