அமெரிக்க மாடலில் புத்தம் புதிய ஸ்டாலின் பஸ்! முதலமைச்சரின் அசத்தல் திட்டம்!!

அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் 12ம் வகுப்பு வரையிலும் அரசுப் பள்ளிகளில் பெரும்பான்மையான மாணவர்கள் பயின்று வருகிறார்கள். ஒவ்வொரு நகருக்கும் அமெரிக்காவில் தனித்தனி கல்வி மாவட்டங்கள் உண்டு. மாநில கல்வித்துறையின் விதிகளுக்கு உட்பட்டே இவை இயங்கினாலும் தன்னாட்சி பெற்ற அமைப்பாக இருக்கும். இந்த கல்வி மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கல்வி மாவட்டத்திற்கு என சொத்துவரியில் ஒரு கணிசமான பங்கு வசூலிக்கப்படுகிறது. அங்கு கல்வி மாவட்டங்கள் சார்பில் மாணவர்களை வீட்டிலிருந்து அழைத்து வருவதற்கு பள்ளிப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இந்த புதிய பேருந்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளார். சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் மாநிலம் முழுவதும் விரிவு படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
முதல் கட்டமாக, சென்னை மாநகரில் இந்தப் புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மாணவர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று ஏற்றி, பள்ளிக்கு அழைத்துச் செல்வதும், மாலை பள்ளி முடிந்தவுடன் வீட்டுக்கே பாதுகாப்பாக இறக்கி விடுவதும் என, இந்தப் பேருந்து சேவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
காலை உணவு, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், கல்விப் பேருந்து, நான் முதல்வன் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் திராவிட மாடல் அரசு என்று பெருமையுடன் பறைசாற்றி வரும் முதலமைச்சர் ஸ்டாலின், கல்விக்காக உருவாக்கி வரும் திட்டங்கள் தமிழ்நாட்டில் மாபெரும் கல்விப்புரட்சியை ஏற்படுத்தி வருகிறது என்பது மிகையல்ல.
தனியார் பள்ளி வாகனங்களுக்கு மஞ்சள் கலரில் தனி அடையாளம் தந்து பல்வேறு நிபந்தனைகளை அறிமுகப்படுத்தியது முந்தைய கலைஞர் ஆட்சியின் போது தான் என்பது நினைவுகூறத் தக்கது.