ஆட்டுச்சந்தையில் அமோக வியாபாரம்! பொங்கல் கொண்டாட்டம் ஆரம்பம்!!

 
Goat Market

வரும் செவ்வாய்கிழமை தமிழ்நாடு முழுவதும் தமிழர் திருநாள் பொங்கல் விழா கொண்டாடப் படுகிறது. நேற்று வெள்ளிக்கிழமை முதலாகவே வெளிமாவட்டங்களுக்கு சென்னையிலிருந்து மக்கள் செல்லத் தொடங்கிவிட்டனர்.

கடைகளில் பொங்கல் விழாவுக்கான பொருட்கள் விறுவிறுப்பாக விற்றுக் கொண்டிருக்கிறது. கரும்பு, பனங்கிழங்கு, மஞ்சள் குலை, பச்சரிசி, சர்க்கரை வெல்லம் மட்டுமல்லாமல் மண்பானைகளையும் மக்கள் வாங்கிச் செல்கின்றனர். பொங்கல் நாளுக்கு அடுத்த நாள் கரிநாளாகக் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான குடும்பங்களில் அன்று ஆட்டு இறைச்சி சமைத்து வெண் பொங்கலுடன் சாப்பிடுவது வழக்கமாகும்.

கரிநாளுக்கு ஆட்டுக்கறி விற்பனை அமோகமாக இருக்கும் என்பதால் ஆட்டுச்சந்தையில் ஆடுகளும் நல்ல விலைக்கு விற்கும். திருமங்கலம் வாராந்திர ஆட்டுச் சந்தையில் சுமார் 4 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

From around the web