மாநிலங்களை ஒழிக்கத் துடிக்கும் பாஜக! உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!!

 
Udhay

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளதற்கு எதிர்க்கட்சித்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவேசமான பதிவு ஒன்றை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

”ஒரே நாடு - ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருப்பது இந்திய ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல். ஒன்றியத்திலும் மாநிலங்களிலும் சர்வாதிகாரத்திற்கு களம் அமைக்கும் சதித்திட்டம் இது. எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களை ஆளுநர் மூலம் ஆளலாம் என்கிற தந்திரமும் இதில் உள்ளது.

இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைத்து, மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, கடைசியில் மாநிலங்களையே ஒழிக்க தான் ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ திட்டம் வழிவகுக்கும். பேராபத்தான இத்திட்டத்தை நமது கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் வலிமையுடன் எதிர்ப்போம்! மாநிலங்களைக் காப்போம்!!” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


 

From around the web