பாஜக முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் வெளியீடு

 
Annamalai

தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுக்கான பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது.

2024 நாடாளுமன்ற தேர்தல் தேதி கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்றும் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் அறிவிக்கப்படும் முன்பே தமிழ்நாட்டில் கட்சிகள் தேர்தல் கால கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த தொடங்கியது. அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி உறுதி செய்ய தடுமாறியது. ஆனால் திமுக தலைமையில் கூட்டணியில் தொகுதி பங்கீடு தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே முடிக்கப்பட்டது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் திமுக 21, காங்கிரஸ் 10, மதிமுக 1, விசிக மற்றும் கம்யூனிஸ் கட்சிகள் தலா 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இந்நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணி நேற்று தான் இறுதி செய்யப்பட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் அதிமுக 33 தொகுதிகளிலும், தேமுதிக 5, புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

BJP

பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டு கட்ட பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் பாஜக போட்டியிடும் என்பது தொடர்பான வேட்பாளர் பட்டியல் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் போட்டியிடும் 9 வேட்பாளர்கள் கொண்ட முதல் கட்ட பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது.

இதன்படி தென் சென்னையில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் இருந்தும், மத்திய அமைச்சர் எல்.முருகன் நீலகிரி தொகுதியிலிருந்தும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

BJP

மத்திய சென்னை தொகுதியில் வினோஜ் பி. செல்வமும், கிருஷ்ணகிரி தொகுதியிலிருந்து நரசிம்மனும், தூத்துக்குடி தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரனும், கன்னியாகுமரி தொகுதியில் இருந்து பொன். ராதாகிருஷ்ணனும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வேலூர் தொகுதியில் ஏ.சி.சண்முகமும், பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தரும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web